ஆஸ்திரேலியாவில் கதிரியக்க ஆபத்துடன் தவறவிடப்பட்ட சிறிய குப்பி மீட்கப்பட்டுள்ளதாக அரசு அறிவிப்பு
Feb 1 2023 4:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரேலியாவில் கதிரியக்க ஆபத்துடன் தவறவிடப்பட்ட ஒரு சென்டி மீட்டர் உயரமே உள்ள சிறிய குப்பி மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சுரங்கத் தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் தனிமமான சீசியம் -137 தனிமம் அடங்கிய ஒரு சென்டி மீட்டருக்கும் குறைவான உயரம் மற்றும் சுற்றளவுடன் இருந்த ஒரு குப்பி கடந்த நான்கு நாட்களுக்கு முன் காணாமல் போனது. மேற்கு ஆஸ்திரேலியாவின் நியூமேன் நகரில் இருந்து பெர்த் நகருக்கு ஒரு கன்டெய்னரில் எடுத்துச் செல்லப்பட்டபோது அந்த குப்பி மாயமான நிலையில், அதைக் காணும் போது மிகவும் கவர்ச்சியாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் யாராவது அதை எடுத்துச் செல்லும் ஆபத்து இருந்தது. இந்நிலையில், இது குறித்த எச்சரிக்கையை விடுத்த போலீசார், சுமார் ஆயிரத்து 400 கிலோ மீட்டர் தொலைவில் அக்குப்பியைத் தேடும் பணிகளை முடுக்கிவிட்டனர். இதற்கிடையே அந்த குப்பி தற்போது பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.