சமூக வலைதள பிரபலம் ஆண்ட்ரூ டேட் மீது பாலியல் வன்கொடுமை புகார் : பிரிட்டனை சேர்ந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு
Jun 8 2023 4:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சமூக வலைதள பிரபலமானவரும், மனித கடத்தல் குற்றச்சாட்டில் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டவருமான ஆண்ட்ரூ டேட் மீது பிரிட்டனை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு பிரிட்டனில் உள்ள லுட்டன் நகரில் கிளப் ஒன்றில் டோர்மேனாக வேலை செய்த ஆண்ட்ரூ டேட்டை சந்தித்தாக கூறிய எவி என்ற இளம்பெண், முதலில் இருவரும் மனமொத்து வாழ்ந்து வந்ததாக தெரிவித்தார். ஆனால் அடுத்த சில மாதங்களில் தன்னை வலுக்கட்டாயமாக கீழே தள்ளி மயக்கமடைய வைத்த ஆண்ட்ரூ டேட், பாலியல் வன்கொடுமை செய்ததாக எவி கூறியுள்ளார். இதுகுறித்து கேள்வி எழுப்பிய தன்னை கொலை செய்துவிடுவதாக ஆண்ட்ரூ டேட் மிரட்டியதாகவும் இளம்பெண் எவி குற்றம் சாட்டி உள்ளார்.