உலகின் அதிகமான மாசுபட்ட நகரமானது நியூயார்க் : கனடாவில் ஏற்பட்ட காட்டுத் தீயின் காரணமாக மாசு ஏற்பட்டதாக ஆய்வில் தகவல்
Jun 8 2023 4:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலகிலேயே அதிகமாக மாசுபட்ட நகரமாக நியூயார்க் நகரம் மாறியுள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. கனடாவில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக வடக்கு அமெரிக்கா முழுமையும் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது. இதனால், நியூயார்க்கில் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. காட்டுத் தீ காரணமாக நியூஜெர்சியில் ஹட்சன் நதியைக் கடந்து நியூயார்க் நகரில் மாசு ஏற்படுத்தி வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. டெல்லி மற்றும் இராகின் பாக்தாத்தில் மிகமோசமான காற்றுமாசு ஏற்படுவதாகக் கருதப்பட்ட நிலையில், நியூயார்க்கில் காற்று மாசு அதைவிட மோசம் அடைந்ததுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.