சீனாவில் ஒவ்வொரு ஆறுமாதமும் கோவிட் வைரஸை சந்திக்க நேரிடும் : புதிய மாறுபட்ட கோவிட் வைரஸால் பல லட்சம் பேர் பாதிக்கும் அபாயம் என நிபுணர்கள் கருத்து
Jun 8 2023 5:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவில் ஒவ்வொரு 6 மாதங்களிலும் கோவிட் பாதிப்பு அதிகரிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய மாறுபட்ட கோவிட் வைரஸை ஒவ்வொரு 6 மாதங்களிலும் சீனாவில் சந்திக்க நேரிடும் என்றும், இதில் பல லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கோவிட் பாதிப்புகளின் அனைத்துக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டதே இதற்கான காரணம் என்று கூறப்படுகிறது. நோய்த்தொற்றின் அலைகள் புதிய மாறுபாடுகள் தோன்றுவதற்கான அபாயத்தைக் கொண்டுள்ளன என்று சியாட்டிலில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் தொற்று நோயியல் நிபுணர் அலி மொக்தாட் தெரிவித்துள்ளார்.