ஈரான் உதவியுடன் டிரோன் தொழிற்சாலை கட்டிவரும் ரஷ்யா : உக்ரைனுக்கு எதிராக டிரோன்கள் பயன்படுத்தப்படுகிறது என அமெரிக்கா குற்றச்சாட்டு
Jun 10 2023 3:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரான் உதவியுடன் ரஷ்யா, டிரோன் தொழிற்சாலை கட்டிவருவதாக அமெரிக்க குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நிலவி வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா அவ்வபோது டிரோன் தாக்குதலை நடத்திவரும் நிலையில் ஈரான் உதவியுடன் ரஷ்யா டிரோன் தொழிற்சாலை கட்டிவருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மாஸ்கோவின் கிழக்குப் பகுதியில் கட்டப்படும் இந்த தொழிற்சாலைக்கு, ஈரான் உபகரணங்களை வழங்கி வருவதாகவும், உளவுத்துறை மூலம் இந்த தகவல் தெரிய வந்துள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஏற்கெனவே ஈரானின் அமிராபாத்தில் இருந்து ரஷியாவின் மகாச்கலா என்ற இடத்திற்கு டிரோன்கள் கொண்டு வரப்படுவதாகவும், அதன்பிறகு, உக்ரைனுக்கு எதிராக டிரோன்கள் பயன்படுத்தப்படுவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.