உக்ரைனுக்கு எதிராக ஜூலை முதல் வாரம் பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதங்களை குவிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் குற்றச்சாட்டு
Jun 10 2023 3:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உக்ரைனுக்கு எதிராக ஜூலை முதல் வாரம் பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதங்களை குவிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான போரில், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவியுடன் உக்ரைன் போரிட்டு வருகிறது. இந்நிலையில் ரஷிய அதிபர் புதின், பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவை நேற்று சந்தித்தார். அப்போது ஜூலை 7 அல்லது 8-ந்தேதிக்குள் தந்திரோபாய அணுஆயுதங்களை வைப்பதற்கான கட்டிட வேலைகள் முடிந்துவிடும் எனவும், அதன்பின் பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதங்கள் கொண்டு வந்து குவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். பெலாரஸ் நாட்டின் எதிர்க்கட்சிகள் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.