வானத்தில் இருந்து மர்மப்பொருள் விழுந்ததாக அமெரிக்க போலீசில் புகார் : 8 மற்றும் 10 அடி உயரங்களில் பெரிய கண்களுடன் 2 பேரை பார்த்ததாக தகவல்
Jun 10 2023 4:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வானத்தில் இருந்து ஏதோ ஒரு பொருள் விழுந்ததையும் அங்கு ராட்சத உயரத்தில் இருவர் தெரிந்ததை பார்த்ததாகவும் காவல் துறையில் அமெரிக்கர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். வேற்றுகிரகத்தில் ஏலியன்கள் இருப்பதாக நீண்டகாலமாகவே ஆராய்ச்சி நடந்து வருகிறது. இந்தநிலையில், அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நொவாடாவில், வானத்தில் இருந்து ஏதோ ஒன்று விழுவதை தான் பார்த்ததாகவும், வீட்டின் பின்புறத்தில் 2 உருவங்களின் அசைவு இருந்ததாகவும் ஒருவர் தெரிவித்துள்ளார். அந்த உருவங்கள் 8 அடி உயரம் மற்றும் 10 அடி உயரங்களில் இருந்தன என்றும் அந்த நபர் தெரிவித்துள்ளார். அந்த உருவங்களுக்கு பளபளப்பான கண்களும் பெரிய அளவிலான வாய் இருந்ததாகவும் அவர் அமெரிக்க போலீசிடம் தெரிவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.