ஜப்பானில் இரு பயணிகள் விமானங்கள் மோதிக்கொண்டதால் பரபரப்பு : பாங்காக் சென்ற விமானம் தைபே சென்ற விமானத்தில் மோதி விபத்து
Jun 10 2023 4:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜப்பானில் இரண்டு பயணிகள் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில், பாங்காக் நோக்கிச் சென்ற தாய் ஏர்வேஸ் இன்டர்நேஷனல் ஜெட், தைபே நோக்கிச் சென்ற ஈவா ஏர்வேஸ் விமானம் மீது தவறுதலாக மோதியது. இந்த விபத்தையடுத்து ஓடுபாதை மூடப்பட்டது. சில விமானங்கள் தாமதமானதாக புறப்பட்டன. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயமில்லை என்றும், தாய் ஏர்வேஸ் விமானத்தின் இறக்கை ஒன்று மட்டும் சேதமடைந்துள்ளதாகவும் ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.