கிளர்ச்சியாளர்களுடன் அமைதிப்பேச்சுக்கள் நடத்த தயாராக இருப்பதாக சிரியா அதிபர் அறிவிப்பு : பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என்றும் தகவல்

Jan 10 2017 1:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
கிளர்ச்சியாளர்களுடன் அமைதிப்பேச்சுக்கள் நடத்த தயாராக இருப்பதாக சிரியா அதிபர் Bashar Al-Assad அறிவித்துள்ளார். இந்த பேச்சுக்களின்போது, பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சிரியாவில், அதிபர் Bashar Al-Assad ஆதரவுப்படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ம் தேதி உள்நாட்டுப் போர் தொடங்கியது. தொடர்ந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்தப் போரில், 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். அதிபர் Bashar Al-Assad தலைமையிலான அரசுப்படைக்கு ஆதரவாக, ரஷ்யப் படைகள் வான்வழித் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு, அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

ரஷ்யா, துருக்கி ஆதரவுடன் கிளர்ச்சியாளர்களுக்கும், அதிபர் படைகளுக்கும் இடையே, கடந்த டிசம்பர் மாதம் 30-ம் தேதி சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. கிளர்ச்சியாளர் மற்றும் அதிபர் குழுக்களுக்கும் இடையே, இம்மாதம் கஜகஸ்தானில் சமாதான பேச்சுவார்த்தைகள் நடத்தவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கிளர்ச்சியாளர்களுடன் அனைத்து பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கத் தயாராக உள்ளதாக சிரியா அதிபர் Bashar Al-Assad தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கிளர்ச்சியாளர்களுக்கும், அரசுப்படைகளுக்கும் இடையே, Wadi Barada பகுதியில் சண்டை நடைபெற்று வருவதால், தலைநகர் டமாஸ்கஸில் கடும் குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. டமாஸ்கஸில் ஏற்கெனவே கடும் குளிர் நிலவும் சூழலில், குடிநீர்ப் பஞ்சமும் தலைவிரித்து ஆடுவதால், பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2965.00 Rs. 3171.00
மும்பை Rs. 2987.00 Rs. 3163.00
டெல்லி Rs. 3000.00 Rs. 3177.00
கொல்கத்தா Rs. 3000.00 Rs. 3174.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.20 Rs. 43200.00
மும்பை Rs. 43.20 Rs. 43200.00
டெல்லி Rs. 43.20 Rs. 43200.00
கொல்கத்தா Rs. 43.20 Rs. 43200.00