அமெரிக்காவின் மீது எந்தவொரு தீவிரவாத அமைப்புகளும் தாக்குதலை நடத்த முடியாது - அதிபர் ஒபாமா நிறைவு உரையில் உறுதி - ஐ.எஸ். தீவிரவாதிகள் முற்றிலுமாக ஒடுக்கப்படுவார்கள் - இஸ்லாமியர்கள் மீது பாகுபாடு செய்யப்படும் புகாருக்கு மறுப்பு

Jan 11 2017 9:54AM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எந்தவொரு வெளிநாட்டு தீவிரவாத அமைப்பும் முற்றிலுமாக அழிக்கப்படும் என அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். பின்லாடன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தீவிரவாதிகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், அமெரிக்கா மேலும் பாதுகாப்பான நாடாக உள்ளதாகவும், தனது நிறைவு உரையில் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் பதவியில் இருமுறை இருந்து தற்போது ஓய்வு பெறவுள்ள பாரக் ஒபாமா, நிறைவு உரையாற்றினார். சிகாகோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், 8 ஆண்டுகளுக்கு முன்னர் தன்னை அதிபராக தேர்ந்தெடுக்க அமெரிக்க மக்களிடம் தான் எதையும் கேட்டதில்லை என்றும், அதே மனநிலையில்தான் தற்போது அதிபராக இருந்து விடைபெறும் தருணத்திலும் இருப்பதாகத் தெரிவித்தார். அமெரிக்காவில் ஜனநாயக முறைப்படி இன்னும் 10 நாட்களில் ஆட்சி மாற்றம் ஏற்படவுள்ளதாகத் தெரிவித்த ஒபாமா, அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த நினைக்கும் எந்தவொரு வெளிநாட்டு தீவிரவாத அமைப்பும் அழிக்கப்படும் என தெரிவித்தார். பின்லாடன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான எதிரிகள் வீழ்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ஐ.எஸ். தீவிரவாதிகள் முற்றிலுமாக ஒழிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்த ஒபாமா, அமெரிக்க மண்ணில் முஸ்லிம்கள் மீது பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறப்படுவதை மறுத்தார். கண்மூடித்தனமாக ஏற்படும் நட்பு ஜனநாயகத்திற்கு ஆபத்தானது எனத் தெரிவித்த அவர், ரஷ்யாவிடம் டிரம்ப் கொண்டுள்ள உறவை மறைமுகமாக சாடினார். நிறவெறி சமூகத்தை வீரியமாக பிரிக்கும் சக்தி எனக் குறிப்பிட்ட அமெரிக்க அதிபர் ஒபாமா, அமெரிக்கா முன்பை விட மிக வலிமையாக உள்ளதாகக் கூறினார். மிச்செல், கடந்த 25 ஆண்டுகளாக தனக்கு மனைவியாகவும், தனது பிள்ளைகளுக்கு தாயாகவும் மட்டுமல்லாமல், சிறந்த நண்பராகவும் இருந்ததாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட ஒபாமா, மிச்செல் ஒரு முன் உதாரணமாக இருப்பதாகவும், அவரை நினைத்து நாடு பெருமைப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2727.00 Rs. 2917.00
மும்பை Rs. 2748.00 Rs. 2910.00
டெல்லி Rs. 2760.00 Rs. 2923.00
கொல்கத்தா Rs. 2760.00 Rs. 2920.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.50 Rs. 39500.00
மும்பை Rs. 39.50 Rs. 39500.00
டெல்லி Rs. 39.50 Rs. 39500.00
கொல்கத்தா Rs. 39.50 Rs. 39500.00