வடகொரிய அதிபரின் அண்ணன் படுகொலையில் அடையாளம் காணப்பட்ட குற்றவாளிகள் கைது : பெண் கூலிப்படையை வைத்து வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது அண்ணனைப் படுகொலை செய்ததாக மலேசிய போலீசார் தகவல்

Feb 17 2017 1:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
வடகொரிய அதிபரின் அண்ணன் படுகொலையில் அடையாளம் காணப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இதனிடையே பெண் கூலிப்படையை வைத்து வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது அண்ணனைப் படுகொலை செய்ததாக மலேசிய போலீசார் தெரிவித்துள்ளனர்.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் அண்ணன் கிம் ஜாங் நம், சமீபத்தில் மக்காவ் நாட்டில் இருந்து மலேசியாவுக்குச் சென்றிருந்தார். அங்குள்ள சர்வதேச விமான நிலையத்தில் காத்திருந்த போது, 2 பெண்கள் அவருக்கு விஷ ஊசி செலுத்திவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் கிம் ஜாங் நம் உயிரிழந்தார். சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் மூலம் அடையாளம் காணப்பட்ட பெண்கள் இருவரையும் மலேசிய காவல் துறையினர் அடுத்தடுத்து கைது செய்தனர்.

இதில் ஒரு பெண் இந்தோனேசியாவின் பன்டென் மாகாணத்தின் செராங் பகுதியைச் சேர்ந்த சிதி ஆய்ஷா என தெரியவந்துள்ளது. மற்றொரு பெண் வியட்நாமைச் சேர்ந்த டோன் தி ஹுவாங் என்றும் தெரியவந்துள்ளது. கொலைக்குற்றவாளிகளான பெண்கள் இருவரையும், மலேசிய தங்கும் விடுதியில் பார்த்ததாக விடுதி பணியாளர் உறுதி செய்துள்ளார். இதனிடையே, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், பெண் கூலிப்படையை வைத்து தனது அண்ணனைப் படுகொலை செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து மலேசிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2759.00 Rs. 2951.00
மும்பை Rs. 2779.00 Rs. 2943.00
டெல்லி Rs. 2791.00 Rs. 2956.00
கொல்கத்தா Rs. 2791.00 Rs. 2953.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.50 Rs. 41500.00
மும்பை Rs. 41.50 Rs. 41500.00
டெல்லி Rs. 41.50 Rs. 41500.00
கொல்கத்தா Rs. 41.50 Rs. 41500.00