பாகிஸ்தானில் Sufi தர்காவில் தற்கொலைப் படைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நூறாக உயர்வு : தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு

Feb 17 2017 9:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
பாகிஸ்தானில் உள்ள Sufi தர்காவில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நூறாக உயர்ந்துள்ள நிலையில், இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தின் Sehwan நகரில் உள்ள Sufi தர்காவில் நேற்று மாலை குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. தர்காவில் ஏராளமானோர் கூடியிருந்தபோது, தற்கொலைப் படைத்தாக்குதலில் ஈடுபட்ட நபர், தான் உடம்பில் கட்டியிருந்த குண்டுகளை திடீரென வெடிக்கச் செய்தார். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 30 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது. இந்நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை நூறாக உயர்ந்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், பெண்களும் குழந்தைகளும் அடங்குவர். காயம் அடைந்த நூற்றுக்கும் மேற்ப்டடோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த கொடூரமான தற்கொலைப்படைத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்கொலைப் படைத் தாக்குதலையடுத்து, Sehwan நகர் சோகத்தில் மூழ்கியுள்ளது. உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, தாக்குதலில் பலியான அப்பாவி மக்களின் உடல்கள், Sehwan நகரில் அடக்கம் செய்யப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • POONKATRU

  Mon - Fri : 18:30

 • Jai Veer Hanuman

  Mon - Fri : 19:00

 • Kairasi Kudumbam

  Mon - Fri : 20:30

 • Sondhangal

  Mon - Fri : 21:00

 • Periya Idathu Penn

  Mon - Fri : 21:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2766.00 Rs. 2958.00
மும்பை Rs. 2786.00 Rs. 2950.00
டெல்லி Rs. 2798.00 Rs. 2963.00
கொல்கத்தா Rs. 2797.00 Rs. 2960.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.40 Rs. 41400.00
மும்பை Rs. 41.40 Rs. 41400.00
டெல்லி Rs. 41.40 Rs. 41400.00
கொல்கத்தா Rs. 41.40 Rs. 41400.00