சாலைப் பாதுகாப்பு விதிகளை கடுமையாக்க வலியுறுத்தி, பங்களாதேஷில் போராட்டம் நடத்திய விவகாரம் : மாணவர்கள் மீது, அடக்குமுறையைக் கையாண்டதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் குற்றச்சாட்டு

Aug 9 2018 12:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
சாலைப் பாதுகாப்பு விதிகளை கடுமையாக்க வலியுறுத்தி, பங்களாதேஷில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது, அந்நாட்டு அரசு அடக்குமுறையைக் கையாண்டதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

பங்களாதேஷில், கடந்த மாதம் இரண்டு பேருந்துகளை போட்டி போட்டு ஓட்டுநர்கள் ஓட்டிச் சென்றதில், பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த கல்லூரி மாணவர்கள் மீது, ஒரு பேருந்து மோதியது. இதில், இரண்டு மாணவர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இதையடுத்து, இரண்டு பேருந்துகளின் ஓட்டுநர்களும் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து, அடிக்கடி நிகழும் இதுபோன்ற சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில், போக்குவரத்து விதிமுறைகளைக் கடுமையாக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தலைநகர் டாக்காவில், மாணவர்கள் தொடர்ந்து நடத்திய முற்றுகைப் போராட்டத்தால், நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தை ஒடுக்க, இணையதளத்தை முடக்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டாலும், மாணவர் போராட்டம் தொடர்ந்து நீடித்து வந்தது. இந்நிலையில், கடந்த 5-ம் தேதியன்று, போராட்டம் தீவிரமடைந்து வன்முறை வெடித்தது. போலீசாருக்கும், மாணவர்களுக்குமிடையே ஏற்பட்ட மோதலில், கண்ணீர் புகைகுண்டு வீசப்பட்டது. தடியடியில் பலர் காயமடைந்தனர். மாணவர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக, விபத்துகளால் உயிரிழப்புகளை ஏற்படுத்துவோருக்கான தண்டனையைக் கடுமையாக்கும் புதிய சட்டத்துக்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் வழங்கியது.

இந்நிலையில், அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டுள்ள 'Human Rights Watch' என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைதியான முறையில் போராடிக் கொண்டிருந்த மாணவர்கள் மீது, தடி மற்றும் அரிவாளைக் கொண்டு, ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் கடுமையான தாக்குதல் நிகழ்த்தியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்கள் மீதும் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தவறான செய்திகளை பரப்பியதாக, புகைப்பட செய்தியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது மிகப்பெரிய மனித உரிமை மீறலாகும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • AREMPESAVIRUMBU

  Mon - Fri : 18:00

 • MANNERGAL

  Sat : 21:00

 • ULAGAM MARUPAKKAM

  Sun : 12:30

 • AALAYAMUM AARADHANAYUM

  Sun : 07:30

 • KALLADATHU ULAGALAVU

  Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2963.00 Rs. 3169.00
மும்பை Rs. 2985.00 Rs. 3161.00
டெல்லி Rs. 2998.00 Rs. 3175.00
கொல்கத்தா Rs. 2998.00 Rs. 3172.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.20 Rs. 41200.00
மும்பை Rs. 41.20 Rs. 41200.00
டெல்லி Rs. 41.20 Rs. 41200.00
கொல்கத்தா Rs. 41.20 Rs. 41200.00