சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயரும் என்பதால் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு மட்டும் விலக்கு : அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்‍கம்

Nov 7 2018 1:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயரும் என்பதாலேயே ஈரான் மீதான தடை விவகாரத்தில் இந்தியாவுக்‍கு விலக்‍கு அளிக்‍கப் பட்டிருப்பதாக அமெரிக்‍க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அணுஆயுதம் தொடர்பான பிரச்னையில் ஈரான் மீது அமெரிக்‍க பொருளாதார தடை விதித்தது. அதுமட்டுமின்றி, அந்த நாட்டிலிருந்து எந்தவொரு நாடும் கச்சா எண்ணெய்யை இறக்‍குமதி செய்யக்‍ கூடாது என்றும், அவ்வாறு செய்தால் அந்நாடுகளின் மீதும் பொருளாதார விதிக்‍கப்படும் என்றும் அதிபர் டிரம்ப் எச்சரித்திருந்தார். ஆனாலும், ஈரானிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய்யை இறக்‍குமதி செய்ய இந்தியா முடிவு செய்தது. இதை சற்றும் எதிர்பார்க்‍காத அமெரிக்‍கா கடும் அதிருப்திக்‍கு ஆளானாது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப், கச்சா எண்ணெய் விவகாரத்தில் ஈரான் மீதான பிடியை எடுத்தவுடன் தீவிரப்படுத்த முடியாது எனக்‍ கூறினார். மேலும், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவிடக் ‍கூடாது என்பதாலேயே இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்‍கு தடையிலிருந்து விலக்‍கு அளித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஈரானின் கச்சா எண்ணெய் இறக்‍குமதியை முற்றிலுமாக முடக்‍கினால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயரும் என்பதாலேயே சில நாடுகளுக்‍கு மட்டும் தடையிலிருந்து விலக்‍கு அளிக்‍கப் பட்டிருப்பதாக அதிபர் டிரம்ப் விளக்‍கம் அளித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00