இலங்கையில் வழிபாட்டுத் தலங்களை குறிவைத்து தீவிரவாதிகள் மீண்டும் தாக்‍குதல் நடத்த வாய்ப்பு : அமெரிக்‍கா மற்றும் பிரிட்டன் நாடுகள் எச்சரிக்‍கை

Apr 26 2019 12:05PM
எழுத்தின் அளவு: அ + அ -
இலங்கையில் வழிபாட்டுத் தலங்களை குறிவைத்து தீவிரவாதிகள் மீண்டும் தாக்‍குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக அமெரிக்‍கா மற்றும் பிரிட்டன் நாடுகள் எச்சரிக்‍கை விடுத்துள்ளன.

இலங்கைத் தலைநகர் கொழும்பில் St. Sebastian தேவாலயம், St. Anthony தேவாலயம் ஆகியவற்றில், கடந்த 21-ம் தேதி, ஈஸ்டர் திருநாள் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றுக்‍ கொண்டிருந்தபோது, திடீரென வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறின. கொழும்பு நகரில் உள்ள 5 நட்சத்திர ஆடம்பர ஹோட்டல்களான Shangri-La, Cinnamon Grand, Kingsbury ஆகிய ஹோட்டல்களிலும் வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 360-ஆக உயர்ந்துள்ளது. 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து, மருத்துவமனைகளில் சிகிக்‍சை பெற்று வருகின்றனர். வெடிகுண்டு சம்பவங்களில் தொடர்புடைய 60 பேரை போலீசார் ஏற்கெனவே கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கையில் வழிபாட்டுத் தலங்களை குறிவைத்து தீவிரவாதிகள் மீண்டும் தாக்‍குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக அமெரிக்‍கா மற்றும் பிரிட்டன் நாடுகள் எச்சரிக்‍கை விடுத்துள்ளன. அதிமுக்‍கியத்துவம் வாய்ந்த பணிகள் உள்ளவர்களை தவிர, மற்ற பிரிட்டன்வாசிகள், இலங்கை பயணத்தின்போது எச்சரிக்‍கையுடன் இருக்‍க வேண்டுமென பிரிட்டன் வெளியுறவுத்துறை கேட்டுக்‍கொண்டுள்ளது. இதேபோன்று அமெரிக்‍காவும் தனது நாட்டு பயணிகளுக்‍கு எச்சரிக்‍கை விடுத்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00