இந்திய பொருளாதாரத்தில் சரிவு - 7வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக உலக வங்கி அறிவிப்பு

Aug 2 2019 2:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
உலக அளவில் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு 6வது இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு சரிந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில், உலக நாடுகளின் பொருளாதார தரவரிசைப்பட்டியலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதில், 2018ம் ஆண்டின் நிலவரப்படி, உலக அளவில் 20 லட்சத்து 50 ஆயிரம் கோடி டாலர் பொருளாதார மதிப்புடன் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

13 லட்சத்து 60 ஆயிரம் கோடி டாலர் மதிப்புடன் சீனா இரண்டாவது இடத்திலும், 5 லட்சம் கோடி டாலர் மதிப்புடன் ஜப்பான் 3வது இடத்திலும் உள்ளன. 2 லட்சத்து 80 ஆயிரம் கோடி டாலர் மதிப்புடன் பிரிட்டன் மற்றும் ஃபிரான்ஸ், 5வது மற்றும் 6வது இடத்தைப் பிடித்துள்ளன.

கடந்த முறை 6வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது, ஒருபடி கீழே சரிந்து, 2 லட்சத்து 70 ஆயிரம் கோடி டாலர் மதிப்புடன் 7வது இடத்தில் உள்ளது. நாணய மதிப்பில் ஏற்ற இறக்கம், பொருளதார வளர்ச்சியில் மந்த நிலை உள்ளிட்ட காரணங்களால், 7வது இடத்திற்கு இந்திய பொருளாதாரம் சரிந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00