எல்லையில் தாக்குதல் நடத்தியதற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ராகான் கண்டனம் - சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்புக்கும் இந்தியா அச்சுறுத்தலாக இருப்பதாக புகார்

Aug 5 2019 11:35AM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்திய பாதுகாப்பு படையினர், எல்லையில் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்புக்கும் இந்தியா அச்சுறுத்தலாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் கேரன் செக்டாரில், தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே, நேற்று முன்தினம் முதல், தொடர் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலில், 5 முதல் 7 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக, இந்திய ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் சடலங்களை, வெள்ளைக் கொடியுடன் வந்து பாகிஸ்தான் வாங்கிச் செல்லலாம் என இந்தியா அறிவித்துள்ளது.

இந்நிலையில், எல்லையில் இந்திய பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலுக்கு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்புக்கும் இந்தியா அச்சுறுத்தலாக உள்ளதாகவும், அதை ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

1983-ம் ஆண்டின் சர்வதேச ஆயுதங்கள் ஒப்பந்தத்தையும், சர்வதேச மனிதாபிமான சட்டத்தையும் மீறி, எல்லை தாண்டி, அப்பாவி பொதுமக்கள் மீது, கொத்து குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்திய இந்தியாவின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்வதாகவும் இம்ரான்கான் குறிப்பிட்டுள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தில் சமரசம் செய்ய, அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்த வேண்டுகோளை, இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், நீண்ட நாட்களாக காஷ்மீர் பகுதியில் நீடித்து வரும் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நேரம் இது என்றும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3600.00 RS. 3780.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3665.00 Rs. 3785.00
கொல்கத்தா Rs. 3699.00 Rs. 3839.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00