பிரேசில் நாட்டில், கொள்ளையன் ஒருவன், சிறையிலிருந்து தப்பிக்க, தனது மகள் போல் வேடமிட்டு, பின்னர் மாட்டிக் கொண்ட சுவாரஸ்யமான சம்பவம் அரங்கேறியுள்ளது

Aug 6 2019 7:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரேசிலின் பிரபல கொள்ளை கும்பல் ஒன்றின் தலைவன் க்ளாவினோடா சில்வா. பல ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் இவர், தனது 19 வயது மகளை வைத்து சிறையிலிருந்து தப்பிக்க திட்டம் தீட்டினார். 'மிஷன் இம்பாஸிபிள்' படத்தில் ஹீரோ டாம் குரூஸ், வில்லன் முகத்தை செலுலாய்டு மூலம் பிரதி எடுத்து, தன் முகத்தில் முகமுடிபோல் அணிந்து, வில்லனின் கோட்டைக்குள் நுழைவார். சிறையிலிருந்து தப்பிக்க, இதே யுக்தியைத்தான், கைதி க்ளாவினோடா சில்வாவும் கையாண்டார். அதாவது, தனது மகளின் முகத்தை பிரதி எடுத்து, செலுலாய்டு மூலம் முகமுடி தயாரிக்கச்செய்ததுடன், விக், உடை உள்ளிட்டவைகளையும் தயார் செய்து, தனது மகள்மூலம் சிறைக்குள் கொண்டுவரச் செய்தார். பின்னர், உடைகளை மாற்றிக்கொண்டு, மகளின் முகத்தோற்றத்தில் தயாரிக்கப்பட்ட முகமூடியை அணிந்து, கிட்டத்தட்ட மகளின் தோற்றத்தில் மாறினார். அந்த தோற்றத்தில் முதலில் கைதி வெளியேறுவதும், சிறிதுநேரம் கழித்து, தனது மகள், விசிட்டர்போல் சிறையிலிருந்து வெளியேறுவது என்பதுதான் திட்டம். அதன்படியே, மகள் வேஷத்துடன் நளினமாக நடந்து சென்ற கைதியை, இளம்பெண் என நம்பி வெளியே அனுப்பிய போலீசாருக்கு, திடீரென சந்தேகம் தொற்றவே, அவரை தடுத்து நிறுத்தினர். விசாரணையில், அது, கைதி க்ளாவினோடா என்பதை கண்டறிந்த போலீசார், அந்த கணமே, அவரைக் கைது செய்து, மேக்கப்பை கலைத்தனர். மகள் போல் வேடமிட்டு சிறையிலிருந்து தப்பிக்க முயன்ற கைதியின் வேஷத்தை கலைக்கும்போது அதை வீடியோவாக பதிவு செய்த போலீசார், அந்த வீடியோவை, ட்விட்டரில் பதிவிட, தற்போது உலக அளவில் ட்ரெண்டாகிவிட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00