காஷ்மீருக்‍கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால் மீண்டும் புல்வாமா போன்று தாக்குதல் நடைபெறலாம் - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் எச்சரிக்‍கை

Aug 7 2019 9:43AM
எழுத்தின் அளவு: அ + அ -
காஷ்மீருக்‍கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால், மீண்டும் புல்வாமா போன்று தாக்குதல் நடைபெறலாம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் எச்சரிக்‍கை விடுத்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்துக்கு, அரசியல் சட்டம் 370-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் அந்த மாநிலம் ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.

மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான், இந்தியாவின் இந்த நடவடிக்கைகளை நிராகரிப்பதாக கூறியுள்ளது. காஷ்மீர் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்தியாவின் அத்துமீறலை கண்டிக்கும் தீர்மானம் பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது. எனினும், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், போராட்டத்தில் இறங்கினர்.

இந்நிலையில், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து 370-வது நீக்கப்பட்டதால் மீண்டும் புல்வாமா போன்று ஒரு தாக்குதல் நடைபெறலாம் என பிரதமர் இம்ரான் கான், இந்தியாவுக்‍கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00