காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரம் : இந்திய தூதரை வெளியேற்றிய பாகிஸ்தான், வர்த்தக உறவையும் துண்டித்தது - வான் எல்லையில் விமானங்கள் பறக்க தடை

Aug 8 2019 7:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜம்மு-காஷ்மீருக்‍கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான் அரசு, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதர் வெளியேற உத்தரவிட்டுள்ளதுடன் இருதரப்பு வர்த்தகத்தையும் துண்டித்துக்‍ கொள்வதாக அறிவித்துள்ளது. பாகிஸ்தான் வான் எல்லைக்குள் விமானங்கள் பறக்கவும் தடை விதித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையில், அந்நாட்டின் தேசிய பாதுகாப்புக்‍ குழுக்‍ கூட்டம், இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது. பாகிஸ்தானின் வெளியுறவு, பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சர்கள் நிதி ஆலோசகர், காஷ்மீர் விவகாரங்களுக்‍கான அமைச்சர், மும்படைத் தளபதிகள், ISI உளவு அமைப்பின் தலைவர், அரசு மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட இக்‍கூட்டத்தில், ஜம்மு-காஷ்மீருக்‍கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது குறித்து விவாதிக்‍கப்பட்டது. பின்னர், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் Shah Mehmood Qureshi அளித்த தொலைக்‍காட்சி பேட்டியில் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதர் திரு. Ajay Bisaria பாகிஸ்தானிலிருந்து வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். தங்கள் நாட்டுத் தூதர்கள் இனி ​டெல்லியில் இருக்‍க மாட்டார்கள் எனவும், இதேபோல் இந்தியத் தூதர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியா பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு வர்த்தகத்தை துண்டித்துக்‍ கொள்ளவும், வேறு இருதரப்பு ஏற்பாடுகளை மறு ஆய்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக Qureshi தெரிவித்தார். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சீன அரசுடன் ஆலோசனை நடத்த தான், பெய்ஜிங் செல்லவிருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்திய அரசின் ஒருதலைபட்சமான நடவடிக்‍கையால் 370-வது சட்டப்பிரிவு நீக்‍கப்பட்டது தொடர்பான பிரச்னையை ஐக்‍கிய நாடுகள் சபைக்‍கும், அதன் பாதுகாப்பு கவுன்சிலுக்‍கும் கொண்டு செல்ல முடிவெடுக்‍கப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் சுதந்திரதினமான ஆகஸ்ட் 14-ம் தேதி, காஷ்மீர் மக்‍களுக்‍கு ஆதரவு அளிக்‍கும் தினமாகக்‍ கடைபிடிக்‍கப்படும் என்றும் பாகிஸ்தானின் லாஹூர் வான் பகுதியில் எந்த விமானமும் 46 ஆயிரம் அடிக்கு கீழாக பறக்கக்கூடாது என்றும் பாகிஸ்தான் தடைவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00