காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் கேட்டுக் கொண்டால் உதவ தயார் - அமெரிக்‍காவைத் தொடர்ந்து ஐ.நா. பொதுச் செயலாளரும் விருப்பம்

Sep 20 2019 2:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் கேட்டுக் கொண்டால், அவர்களுக்கு உதவத் தயாராக உள்ளதாக ஐ.நா. பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு பாகிஸ்தான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக, சர்வதேச அமைப்புகளில் இந்த பிரச்னையை பாகிஸ்தான் எழுப்பி வருகிறது. ஐக்கிய நாடுகளின் பொது சபை கூட்டம், நியூயார்க் நகரில் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், இந்தக் கூட்டத்திலும், காஷ்மீர் விவகாரத்தை முன்வைக்‍க, பாகிஸ்தான் தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில், ஐ.நா., பொதுச் செயலாளர் Ant​onio Guterres, எந்த நாடாக இருந்தாலும், மனித உரிமையை மதிக்க வேண்டும் என்றும், இந்தியா - பாகிஸ்தான்இடையேயான பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக கூறினார். பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டியது மிக அவசியம் என்று கூறிய அவர், இரு நாடுகளும் கேட்டுக் கொண்டால், தன்னுடைய அலுவலகம் உதவுவதற்கு தயராக இருப்பதகாவும் கூறினார். இந்த விவகாரத்தில் அமெரிக்‍காவைத் தொடர்ந்து ஐ.நா.வும் தற்போது விருப்பம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்‍கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00