இஸ்ரேல் தேர்தலில் திருப்பம் - கூட்டணி ஆட்சி : பிரதமராக கூட்டணிக் கட்சித் தலைவர் விருப்பம்

Sep 20 2019 11:58AM
எழுத்தின் அளவு: அ + அ -
இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu கட்சியுடன் இணைந்து, கூட்டணி ஆட்சி அமைக்க தயார் என்று கூறிய எதிர்க்‍கட்சித் தலைவர் Benny Gantz, ஆனால், பிரதமராக தாம் விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலில், ஏப்ரலில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், பிரதமர் Benjamin Netanyahu-ன் Likud கட்சி, அதிக இடங்களில் வெற்றி பெற்றும், அதற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து, மீண்டும் பொதுத்தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவில், மொத்தமுள்ள 120 தொகுதிகளில், Benjamin Netanyahu கட்சி 31 இடங்களிலும், எதிர்க்‍கட்சியான Blue and White கூட்டணி, 33 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆட்சி அமைப்பதற்கு 61 இடங்கள் தேவைப்படும் நிலையில், பிரதமர் Benjamin Netanyahu, வலதுசாரி கூட்டணி ஆட்சியை அமைக்க விரும்பவில்லை என்றும், எதிர்க்கட்சி தலைவரான Benny Gantz-சுடன் இணைந்து, கூட்டணி ஆட்சியை அமைக்க தயார் என்றும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக, விரைவில் அவரை சந்தித்து பேசவும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து எதிர்க்‍கட்சித் தலைவர் Benny Gantz பேசியபோது, மீண்டும் ஒரு தேர்தலை சந்திக்க தயாரில்லை என கூறினார். Benjamin Netanyahu-வுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். ஆனால், தங்கள் கட்சியே ஆட்சியை வழி நடத்தும் என்றும், இஸ்ரேலின் அடுத்த பிரதமராக தாமே பதவியேற்க உள்ளதாகவும் கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00