இஸ்ரேலில் தேசிய ஆட்சிக்கான அழைப்பை நிராகரித்தார் பென்னி கான்ட்ஸ் - புதிய அரசு அமைவதில் நீடிக்கிறது சிக்கல்

Sep 21 2019 3:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
இஸ்ரேலில் தேசிய ஆட்சிக்கான பிரதமர் நெதன்யாகுவின் அழைப்பை, எதிர்க்கட்சி தலைவர் நிராகரித்ததையடுத்து, அங்கு புதிய அரசு அமைவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

இஸ்ரேலில் கடந்த 17-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. வாக்குகள் எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான லிகுட் கட்சி 31 இடங்களில் வெற்றி பெற்றது. எதிர்க்கட்சியான புளூ அன்ட் ஒயிட் கட்சி 33 இடங்களில் வெற்றி பெற்றது. 120 இடங்கள் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில், எந்த கட்சிக்கும் மெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சி அமைப்பதற்கு 61 இடங்கள் தேவை என்ற நிலையில், மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலை உருவாகி உள்ளது. இந்த நிலையில், தேசிய அரசை அமைக்க முடிவு செய்த பிரதமர் நெதன்யாகு, எதிர்க்கட்சியான புளூ அன்ட் ஒயிட் கட்சிக்கு அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை நிராகரித்த எதிர்க்கட்சித் தலைவர் பென்னி கான்ட்ஸ், தனது தலைமையிலேயே தேசிய அரசை உருவாக்க விரும்புவதாகவும், அதில் நெதன்யாகு இணைந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 49.50 Rs. 49000.00
மும்பை Rs. 49.50 Rs. 49000.00
டெல்லி Rs. 49.50 Rs. 49000.00
கொல்கத்தா Rs. 49.50 Rs. 49000.00