பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பு - ஈக்‍குவடார் நாட்டில் பயங்கர வன்முறை

Oct 8 2019 2:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈக்‍குவடார் நாட்டில் நடைபெற்ற போராட்டத்தில் பயங்கர வன்முறை வெடித்தது.

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பொதுமக்‍கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, தலைநகர் Quito-வில், அதிபர் Lenin Moreno அரசின் சிக்‍கன நடவடிக்‍கையைக்‍ கண்டித்து, ஆயிரக்‍கணக்‍கானோர் பேரணி நடத்தினர். அப்போது, தடுப்புகளை அகற்றியதோடு, அவர்கள் போலீசார் மீது கற்களை வீசியெறிந்தும் வன்முறையில் ஈடுபட்டனர்.

இதேபோல், Machachi நகரிலும் ஏராளமானோர் அரசுக்‍கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். வாகனங்களில் ஊர்வலமாக வந்த நூற்றுக்‍கணக்‍கானோர், சாலைகளில் டயர்களை கொளுத்தியும், பொதுச் சொத்துக்‍களை சேதப்படுத்தியும் அராஜகத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கண்ணீர் புகைக்‍ குண்டுகளை வீசி கலைத்தனர். இதனால் அப்பகுதியே போர்க்‍களம் போல் காட்சியளித்தது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வலுத்து வரும் போதிலும் விலை உயர்வை திரும்பபெற அந்நாட்டு அதிபர் மறுப்பு தெரிவித்துள்ளார். வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளதால், நாடுமுழுவதும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00