குர்து படைகளுக்கு எதிரான தாக்குதலை நிறுத்தப்போவதில்லை: துருக்கி அதிபர் எர்டோகன் திட்டவட்டம்

Oct 12 2019 12:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
சிரியாவில் குர்திஷ் போராளிகளுக்கு எதிராக, துருக்கி, போர் தொடுத்ததால், இருநாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்துள்ளது. உண்மையில், குர்திஷ்கள் என்போர் யார்? அவர்கள் மீது துருக்கி போர் தொடுக்க காரணமென்ன? என்பதை, சற்று விரிவாகப் பார்ப்போம்...

சிரியா, துருக்கி, ஈரான், ஈராக் மற்றும் அர்மீனியா நாடுகளின் எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள்தான் குர்திஷ்கள். குர்து மொழி பேசும் இவர்களுக்கு, தனி நாடு கிடையாது. சிறுபான்மைக் குழுவினராக இருக்கும் இவர்களின் கோரிக்கை, குர்திஷ்தான் என்ற தனி நாட்டை உருவாக்குவதுதான். குர்திஷ் மக்களை பாதுகாக்கும் 'குர்திஷ் மக்கள் பாதுகாப்புப் படை' சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகளை ஒழித்ததில் பெரும் பங்கு வகித்தது. அதாவது, குர்து போராளி குழுக்களின் ஓய்பிஜி படை, அரபுப் படை மற்றும் அமெரிக்கப் படைகள் இணைந்ததுதான், சிரியாவில் ஐ.எஸ்.அமைப்பை காலி செய்தன. முக்கியமாக, குர்திஷ் போராளி குழுக்கள்தான், இதற்கு தலைமை தாங்கியது. அமெரிக்கப் படைகளுடன் பல ஆண்டுகளாக இணைந்து செயல்பட்ட குர்து படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள சிறைகளில்தான், பிடிபட்ட ஐ.எஸ்.தீவிரவாதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சிரியாவில், நிலைமை இப்படி இருக்க, துருக்கியில், குர்திஷ்களுக்கு பெரிய அளவில் செல்வாக்கு கிடையாது. தனி நாடு கேட்கும் குர்திஷ்கள், தங்கள் நாட்டில் இருப்பதை விரும்பாத துருக்கி, குர்து படைகளை தீவிரவாதிகளாகப் பார்க்கிறது. துருக்கியில், குர்து படைகள், கலகத்தை உண்டாக்கி வருவதாகவும், அந்த நாடு, குற்றஞ்சாட்டி வருகிறது. எனவேதான், துருக்கியில், 20 சதவீத குர்திஷ் மக்கள் இருந்தாலும், அவர்கள் சிறுபான்மைக் குழுவாக அங்கீகரிப்படவில்லை. சிரியாவிலும், தங்கள் நாட்டிலும் உள்ள குர்திஷ்களை ஒழித்துக்கட்ட, துருக்கி அதிபர் எர்டோகன், தக்க சமயத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்த சமயத்தில், இருநாட்டு எல்லைகளிலும் இருந்த தனது படைகளை வாபஸ் பெறுவதாக அறிவித்தார், அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்பட்டது, துருக்கிக்கு க்ரீன் சிக்னலாக மாறிப்போனது.

அமெரிக்காவின் எச்சரிக்கையை பொருட்படுத்தாத துருக்கி, குர்திஷ் போராளிகளுக்கு எதிராக, கடந்த 9-ஆம் தேதி, போர் தொடுத்தது. சிரியாவின் 'ரஸ் அல் அயின்' நகரை நோக்கி, முதலில், துருக்கி ராணுவம், வான் வழித் தாக்குதலை தொடுத்தது. அதைத் தொடர்ந்து, மற்ற நகரங்களிலும் துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தியது. சிரியாவின் எல்லையை ஒட்டிய 'அக்காக்கலே' என்ற இடத்தில், துருக்கி ராணுவ டாங்குகள் குவிக்கப்பட்டு, கடுமையாக தாக்குதல் நடத்தப்பட்டன. 2 நாட்களில், குர்ஷித் படைகளின் 180 முகாம்கள் மீது, துருக்கி, தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. துருக்கியின் தாக்குதலால் உயிருக்கு அஞ்சி, 2 லட்சம் மக்கள், தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும், பலர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. எனினும், சிரியாவில் இருக்கும் குர்து படைகளை மொத்தமாக அழிக்கும் வகையில், ஏவுகணைகள், பீரங்கி குண்டுகள், துப்பாக்கிச்சூடு என, அனைத்து வகையிலும், தாக்குதல் தொடர்ந்தது. சிரியாவில் நடக்கும் போரால், பல லட்சம் மக்கள் ஆபத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், சிறையில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகள் தப்பிச்சென்றால், உலக நாடுகளில் மீண்டும் ஐ.எஸ். பயங்கரவாதம் தலைதூக்கிவிடும் ஆபத்தும் இருக்கிறது. எனவே, துருக்கியின் நடவடிக்கையை ஐ.நா,வும், இந்தியா உள்ளிட்ட நாடுகளும் கடுமையாக கண்டித்துள்ளன. எது எப்படியோ, குர்திஷ்கள் மீதான துருக்கியின் வெறுப்பு, ஐ.எஸ்.பயங்கரவாதத்திற்கு மீண்டும் திறவுகோலாக அமைந்துவிடக்கூடாது என்பதுதான், ஒட்டுமொத்த உலக நாடுகளின் ஒருமித்த எண்ணம்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00