சிலி நாட்டில் ரயில், பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை - தலைநகர் சாண்டியாகோவில் அவசரநிலை பிரகடனம்

Oct 20 2019 4:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
சிலி நாட்டில் ரயில், பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டதை எதிர்த்து, மக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதால், தலைநகர் சாண்டியாகோவில், அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

தென் அமெரிக்க நாடான சிலியில், அண்மையில், ரயில், பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்து கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைநகர் சாண்டியாகோ உள்ளிட்ட பல பகுதிகளில், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டதால், ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களை சூறையாடிய அவர்கள், பேருந்துகளுக்கு தீ வைத்தனர். போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையில் வெடித்த மோதலில், ஏராளமானோர் காயமடைந்தனர்.

இந்நிலையில், தலைநகர் சாண்டியாகோ உள்ளிட்ட பகுதிகளில், 'எமர்ஜென்சி' எனப்படும் அவசரநிலை பிறப்பிக்கப்படுவதாக, சிலி அதிபர் செபாஸ்டியன் பினேரா அறிவித்தார். அடுத்த 15 நாட்களுக்கு இந்த அவசர நிலை தொடரும் என்றும், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00