பிரெக்சிட் நடவடிக்கையை தாமதப்படுத்த எம்.பி.க்கள் ஆதரவு : தீர்மானத்தின் முடிவு சட்டமாக தாக்கல் செய்யப்பட வாய்ப்பு

Oct 20 2019 5:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பிரெக்சிட் தொடர்பான தீர்மானத்தில் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவது தொடர்பான உடன்பாடு, அண்மையில் எட்டப்பட்டது. இந்நிலையில், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரெக்ஸிட் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது.

ஐரோப்பிய யூனியனுடன் பிரதமர் போரிஸ் ஜான்சன் செய்துள்ள புதிய உடன்படிக்கையை ஆய்வு செய்ய அவகாசம் தேவைப்படுவதால், வெளியேறும் நடவடிக்கைக்கான காலக்கெடுவை, 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை நீட்டிக்க வேண்டும் என்னும் புதிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு, வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதற்கு ஆதரவாக 322 எம்.பி.,க்களும், எதிராக 306 எம்.பி.,க்களும் வாக்களித்தனர். 16 வாக்குகள் வித்தியாசத்தில், இந்த சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இது, அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சட்டமாக தாக்கல் செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, பிரெக்சிட் நடவடிக்கையை தாமதப்படுத்தும்படி, ஐரோப்பிய யூனியனை வலியுறுத்த மாட்டேன் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00