கடத்தல் மன்னனின் மகனை மீட்ட கடத்தல்காரர்கள் - அமெரிக்க அதிபரிடம் மெக்சிகோ அதிபர் அவசர ஆலோசனை

Oct 20 2019 6:05PM
எழுத்தின் அளவு: அ + அ -
மெக்சிகோவின் பாதுகாப்பு படையினரை விரட்டியடித்து பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் எல் சாப்போவின் மகனை கடத்தல்காரர்கள் மீட்ட சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்க அதிபருடன் அந்நாட்டு அதிபர் பேச்சு நடத்தியுள்ளார்.

மெக்சிகோவைச் சேர்ந்த பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னனான எல் சாப்போ குஸ்மேன் தற்போது கைது செய்யப்பட்டு அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மகன்களில் ஒருவரான ஒவிடியோ குஸ்மன் மெக்சிகோவின் சினலோயா மாநிலத்தின் ஒரு வீட்டில் பதுங்கி இருந்ததை அறிந்ததும் பாதுகாப்புப் படையினர் அவரை பிடிக்க முயன்றனர். ஆயினும், கடத்தல் கும்பலைச் சேர்ந்த பலர் துப்பாக்கிகளை ஏந்தியபடி பாதுகாப்புப் படையினரைச் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். இதில் 8 பேர் கொல்லப்பட்டதோடு அந்த பகுதியே போர் களம் போல் காட்சியளித்தது. இறுதியில், ஒவிடியோ குஸ்மனை கைது செய்யாமல் பாதுகாப்புப் படையினர் திரும்பி சென்றனர். திரைப்பட பாணியை மிஞ்சும் வகையில் நடைபெற்ற இந்த சம்பவம் மெக்சிகோ மட்டுமல்லாது அமெரிக்காவிலும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பின் அமெரிக்க அதிபரை தொடர்புகொண்டு பேசிய மெக்சிகோ அதிபர் லோபஸ் ஓப்ரேடர், மெக்சிகோவில் சட்ட விரோதமாக ஆயுதங்கள் கடத்தப்படுவதை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00