ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவது தொடர்பான விவகாரம் - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு கடிதங்களால் புதிய குழப்பம்

Oct 21 2019 11:52AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவது தொடர்பான பிரச்சனையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு கடிதங்களை அனுப்பியுள்ளது, குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து, பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரெக்சிட் ஒப்பந்தத்தை, வரும் 31-ம் தேதிக்குள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டு உள்ளது. ஆனால், பிரெக்சிட் ஒப்பந்தத்தை, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை தாமதப்படுத்த வேண்டும் என்ற புதிய சட்டத்திருத்தத்திற்கு பெரும்பாலான எம்.பி.,க்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

இதனால், பிரெக்சிட் ஒப்பந்தம் நிறைவேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சட்ட விதிமுறைப்படி, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்கிற்கு, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது கையெழுத்திடாமல் அனுப்பிய கடிதத்தில், பிரெக்சிட் ஒப்பந்தத்தை தாமதப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

அதே போன்று, தனது கையெழுத்துடன் அவர் அனுப்பிய மற்றொரு கடிதத்தில், பிரெக்சிட் ஒப்பந்தத்தை அக்டோபர் மாதத்திற்கு மேல் தாமதப்படுத்த விரும்பவில்லை என்று குறிப்பிட்‌டிருக்கிறார்.

பிரெக்சிட் விவகாரத்தில், பல்வேறு நடவடிக்கைகள் மாறி மாறி நடந்து வருவதால், ஐரோப்பிய யூனியனில் இருந்து, பிரிட்டன் வெளியேறுகிறதா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00