அமெரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியா வரை 19 மணிநேரம் இடைநில்லாமல் பறந்த பயணிகள் விமானம் - உலகிலேயே நீண்டதூரம் பயணிக்கும் விமானம் வெற்றிகரமாக பரிசோதனை

Oct 21 2019 2:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த குவான்டாஸ் விமான நிறுவனம், உலகிலேயே நீண்ட தூரம் பயணிக்கும் விமான சேவையை வெற்றிகரமாக சோதித்து பார்த்துள்ளது.

அமெரிக்காவின், நியூயார்க் நகரில் இருந்து, கடந்த வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்ட விமானம், தொடர்ச்சியாக 19 மணி நேரம் 16 நிமிடங்கள் வானில் பறந்து, 16 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து, ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரை சென்றடைந்தது. இந்த விமானத்தில், 49 பேர் பயணம் செய்தனர்.

இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்ததால், அடுத்த மாதம் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து, சிட்னிக்கு இடைநில்லா விமான சேவையை சோதிக்க இருப்பதாக, குவான்டாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சோதனையும் வெற்றிகரமாக அமையும்பட்சத்தில், 2023-ம் ஆண்டு நியூயார்க் நகரில் இருந்து சிட்னிக்கும், லண்டனில் இருந்து சிட்னிக்கும் நேரடி விமான போக்குவரத்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00