இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்புத் தாக்குதல் : நாடாளுமன்ற குழு அறிக்கையில் அதிபர் சிறிசேனா மீது புகார்

Oct 24 2019 10:46AM
எழுத்தின் அளவு: அ + அ -
இலங்கையில் நடைபெற்ற தாக்குதல் தொடர்பான நாடாளுமன்ற குழு அறிக்கையில் அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21-ம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நாடாளுமன்றத்தினால் நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை சமர்பிக்கப்பட்டது. தாக்குதலை நடத்துவதற்கு தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் முன்னாள் தலைவர் சஹ்ரான் ஹாஷிம் முன்னின்று செயல்பட்டுள்ளது விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்கூட்டியே புலனாய்வுத் தகவல்கள் வெளியாகியிருந்த போதிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் உள்ள அதிபர் சிறிசேனா தாக்குதலை தடுக்க தவறிவிட்டார் என்றும் தேசத்தின் பாதுகாப்பு குறித்து குறைத்து மதிப்பிட்டுவிட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00