ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அபுபக்கர் அல்-பக்தாதி கொல்லப்பட்டார் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிகாரபூர்வ அறிவிப்பு

Oct 28 2019 11:47AM
எழுத்தின் அளவு: அ + அ -
சிரியாவின் இட்லிப் மாகாணத்தில், தலைமறைவாக இருந்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அபுபக்கர் அல் - பக்தாதி கொல்லப்பட்டதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

சிரியா மற்றும் ஈராக்கில், அரசுப் படைகளை எதிர்த்து, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சிரியாவின் ரக்கா நகரை ஏற்கனவே கைப்பற்றி, தங்களது தலைமை பீடமாக அமைத்துக் கொண்டுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள், வடக்கு மற்றும் கிழக்கு சிரியாவின் பல பகுதிகளையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஆதிக்கம் செலுத்தினர். இதனையடுத்து, அமெரிக்க விமானப்படை துணையுடன், ஐ.எஸ். பயங்கரவாதிகளை தங்கள் நாட்டில் இருந்து ஒழித்துக்கட்ட, ஈராக் அரசு தீர்மானித்தது. இரண்டாண்டுகளாக மோசூல் நகரை மீட்பதற்காக, ஈராக் படைகளுக்கும், ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் இடையில் கடுமையான போர் நடைபெற்று வந்தது. அப்போது அந்த இயக்கத்தின் தலைவன் அபுபக்கர் அல்-பக்தாதி உட்பட தப்பியோடிய ஐ.எஸ். பயங்கரவாதிகள், சிரியா மற்றும் ஈராக் நாட்டு எல்லைப்பகுதியில் உள்ள பாலைவனங்களில் தலைமறைவாக பதுங்கினர். இந்நிலையில், சிரியா ராணுவ தாக்குதலில் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அபுபக்கர் அல்-பக்தாதி கொல்லப்பட்டதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00