குல்பூஷண் ஜாதவுக்கு இந்திய தூதரக உதவியை மறுக்‍கும் பாகிஸ்தானுக்‍கு சர்வதேச நீதிமன்றம் கடும் கண்டனம் - வியன்னா உடன்பாட்டை மீறுவதாகவும் குற்றச்சாட்டு

Oct 31 2019 1:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய முன்னாள் கடற்படை வீரர் குல்பூஷண் ஜாதவுக்கு, இந்திய தூதரக உதவியை மறுத்ததன் மூலம் வியன்னா உடன்பாட்டை பாகிஸ்தான் மீறிவிட்டதாக சர்வதேச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

உளவு பார்த்ததாகவும், பயங்கரவாத சதியில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டி குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரணத்தண்டனை விதித்தது. அதனை எதிர்த்து இந்தியா தொடர்ந்த வழக்கில், சர்வதேச நீதிமன்றம் குல்பூஷனின் மரணதண்டனைக்கு தடை விதித்தது. குல்பூஷனுக்‍கு, வழக்கறிஞரை வைத்து வாதாடவும், இந்திய தூதரக உதவியை பெற்றுக்‍கொள்ளவும் அனுமதி அளித்து தீர்ப்பளித்தது.

இதனைத்தொடர்ந்து, இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் வழக்‍கறிஞர்களுடன், குல்பூஷன் சந்திப்பு நிகழ்ந்தது. ஆனால் சந்திப்பின்போது, பாகிஸ்தான் அதிகாரிகளும் உடனிருந்தனர். பாகிஸ்தான் அதிகாரிகள் உடன் இருந்ததற்கு இந்திய தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்‍கப்பட்டதுடன், அவருக்‍கு தூதரக உதவி அளிக்‍க பாகிஸ்தான் அனுமதி அளிக்‍கவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டது.

இந்நிலையில், குல்பூஷண் ஜாதவுக்கு இந்திய தூதரக உதவியை மறுத்ததன் மூலம் வியன்னா உடன்பாட்டை பாகிஸ்தான் மீறிவிட்டதாக நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00