பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி முன்னிலை - தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவால் தொழிலாளர் கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகினார் ஜெர்மி கார்பைன்

Dec 13 2019 12:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரிட்டனில் பொதுத்தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி 368 இடங்களில் வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் உள்ள 650 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் இந்திய நேரப்படி இன்று பிற்பகலுக்குள் முழுமையாக தெரியவரும் என கூறப்படும் நிலையில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி 368 இடங்களையும் ஜெரமிகோர்பினின் லேபர் கட்சி 191 இடங்களையும் கைப்பற்றும் என பிரபல ஊடகங்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் தெரிவிக்கின்றன. ஸ்காட்லாந்து தேசியகட்சி 55 இடங்களையும் தாராளவாத ஜனநாயக கட்சி 13 இடங்களையும் கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை கன்சர்வேட்டிவ் கட்சி பெறும் என கணிக்கப்பட்டுள்ளதால் பிரெக்சிட் ஒப்பந்தம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் விரைவில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00