அண்ணாமலையார் கோயிலில் அம்பாள் சிலைக்கு சாற்றப்பட்ட ரேஷன் சேலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 மாதந்தோறும் கோடி கணக்கில் காணிக்கை குவியும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் அம்பாள் சிலைக்கு ரேஷன் புடவை சாற்றப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. நினைத்தாலே முக்தி அளிக்கும் ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். நேற்று உண்ணாமுலை அம்மன் சன்னதிக்கு முன் உள்ள அம்பாள் சிலைக்கு ரேஷன் புடவை சாற்றப்பட்டுள்ளது. இதனை ஒரு பக்தர் புகைப்படம் எடுத்து வெளியிட்ட நிலையில், இது சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து சற்று நேரத்திலேயே அம்பாள் சிலைக்கு பட்டுப்புடவை மாற்றப்பட்டது.

Night
Day