அயோத்தி போல் ஒடிசாவிலும் பிரமாண்ட ராமர் கோவில்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அயோத்தியில் பால ராமர் கோயில் திறக்கப்பட்ட அதே நேரத்தில், ஒடிசா மாநிலத்தில் ஆயிரத்து 800 அடி உயரத்தில் உள்ள மலையின் மீது உயர்ந்து நிற்கும் மற்றொரு பிரமாண்ட ராமர் கோயில் திறக்கப்பட்டுள்ளது. 

நாயகரில் உள்ள ஃபதேகர் கிராமத்தில் 73 அடி உயர ராமர் கோயிலானது மாநிலம் முழுவதும் உள்ள கிராம மக்கள் மற்றும் பக்தர்களின் தாராள நன்கொடைகளால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 2017-ல் தொடங்கப்பட்ட கோயில் கட்டுமானப் பணியானது 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் 7 ஆண்டு கால கடும் உழைப்பால் உருவாகியுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த மலைக்கோயில், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஆன்மிகத் தலமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Night
Day