அயோத்தி : KFC சைவ உணவுகளுக்கு மட்டுமே அனுமதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அயோத்தியில் கேஎப்ஃசி கடை திறந்தால் சைவ உணவுகளை மட்டுமே விற்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 22-ம் தேதி ராமர் கோவில் திறக்கப்பட்ட நிலையில் நாள்தோறும் சுமார் 3 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்வதாக கூறப்படுகிறது. இவர்களின் உணவு தேவைக்காக ஹோட்டல்கள் திறக்கப்பட்டுள்ளன. அந்தவகையில்  கேஎஃப்சியும் தனது கிளையை திறக்க உள்ளதாக தகவல் வெளியானது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள மாவட்ட நிர்வாகம், அயோத்தி ராமர் கோயிலை சுற்றியுள்ள 15 கிலோ மீட்டர் தொலைவிற்கு அசைவம் விற்க கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளதாக கூறியுள்ளது. அதனால் கேஎப்ஃசி உட்பட எந்த நிறுவனமும் அந்த எல்லைக்குள் கிளையை திறந்தால்,  சைவம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

Night
Day