அருணாச்சலேஸ்வரர் கோயிலில் இசைஞானி இளையராஜா சாமி தரிசனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வைகாசி மாத அமாவாசையையொட்டி திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலில் இசைஞானி இளையராஜா சாமி தரிசனம் செய்தார். ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இசைஞானி இளையாராஜாவின் இசையில் அடுத்ததாக விடுதலை பாகம் 2 திரைப்படம் வரவிருக்கிறது. இந்நிலையில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு வருகை தந்த இளையராஜா சம்பந்த விநாயகரை வழிபட்டுவிட்டு, அண்ணாமலையர் உடனாகிய உண்ணாமலை அம்மன் சன்னதியில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவருக்கு கோயில் அறங்காவல் குழு சார்பில் மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

Night
Day