எழுத்தின் அளவு: அ+ அ- அ
கேரள மாநிலம் மலப்புரம் அருகே இஸ்லாமிய பள்ளிவாசல் திருவிழாவில் யானைக்கு திடீரென மதம் பிடித்து ஓடியதால் பரபரப்பு நிலவியது.
மலப்புரம் மாவட்டத்தில் திரூர் புதியங்ஙாடி யாகுங்தங்கள் இஸ்ஸாமிய பள்ளிவாசலில் நேர்ச்சைத் திருவிழா நடைபெற்றது. இதற்காக அதிகாலையில் யானைகள் அணிவகுத்து நின்றிருந்தன. அதில் பாகித்து ஸ்ரீகுட்டன் என்ற யானைக்கு திடீரென மதம் பிடித்தது. அப்போது அருகில் இருந்த ஒருவரை யானை தும்பிக்கையால் தூக்கி வீசியது. இதில் படுகாயமடைந்த அவர் கோட்டைக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று யானையின் மேலே இருந்து கீழே தள்ளப்பட்டதில் படுகாயமடைந்த அவர் திரூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மதம் பிடித்த யானை துரத்தியதால் மக்கள் பயந்து ஓடியதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்போர் காயமடைந்தனர். இந்நிலையில், ஒருமணிநேரம் போராடி யானையை பாகன்கள் கட்டுக்குள் கொண்டுவந்தனர் இஸ்லாமிய பள்ளிவாசல் திருவிழாவில் யானை மிரண்டோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.