ஒரு மாதத்திற்குப் பிறகு நடைபயணத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டது தெய்வானை யானை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்செந்தூர் முருகன் கோயில் தெய்வானை யானை ஒரு மாதத்திற்குப் பிறகு நடைபயிற்சிக்கு அழைத்து செல்லப்பட்டது. கடந்த 18ம் தேதி தெய்வானை யானை தாக்கியதில் பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். இதையடுத்து தெய்வானை யானை வனத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்பட 5 குழுக்களின் கண்காணிப்பில் இருந்து வந்த நிலையில் தற்போது சகஜ நிலைமைக்கு திரும்பியுள்ளது. இந்நிலையில், யானை கட்டப்பட்டுள்ள குடிலில் இன்று கஜபூஜை நடந்தது. சிறப்பு ஹோமம், கணபதி ஹோமத்தை தொடர்ந்து தெய்வானைக்கு துண்டு, வேட்டி, மாலை அணிவித்து தீபாராதனை காட்டப்பட்டது. இதையடுத்து ஒருமாதத்திற்கு பிறகு குமரன் விடுதி அமைந்துள்ள இடத்தில் 500 மீட்டர் தூர  பாதையில் 3 முறை தெய்வானை யானை நடைபயிற்சிக்கு அழைத்து செல்லப்பட்டது. 30 நாட்களுக்கு பின்னர் யானையைப் பார்த்த பக்தர்கள் கையெடுத்து கும்பிட்டு வழிபட்டனர்.

Night
Day