கர்நாடகா : பெங்களூருவில் 150 அடி உயரம் கொண்ட தேர் கவிழ்ந்து விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கோயில் திருவிழாவின்போது 150 அடி உயரம் கொண்ட தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஹுஸ்கூர் கிராமத்தில் உள்ள மதுரம்மா கோயிலின் திருவிழாவிற்காக, ஆண்டுதோறும் தேரோட்ட நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறம். அதன்படி இந்தாண்டிற்கான தேரோட்ட நிகழ்ச்சியானது, விமரிசையாக நடைபெற்று வந்தது. சந்தாபுரா - கோல்டன் கிளப் சாலை வழியாக தேர் சென்று கொண்டிருந்தபோது, வளைவில் திருப்ப முயற்சித்ததாக கூறப்படுகிறது. அப்போது சாலையில் இருந்த குழியில், தேரின் சக்கரம் சிக்கியபோது, 150 அடி உயரம் கொண்ட தேரானது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தேர் சரிவதை கண்ட பக்தர்கள் உடனடியாக விலகி சென்றதால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. 

Night
Day