கும்பமேளா பக்தர்களால் பிரயாக்ராஜ் செல்லும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகா கும்பமேளாவுக்குச் செல்லும் லட்சக்கணக்கான பக்தர்களால் பிரயாக்ராஜுக்குச் செல்லும் பாதைகளில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலால் 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றன. 

போக்குவரத்தை நிர்வகிப்பது கடினமாக இருப்பதால், அண்டை மாநிலமான மத்தியப் பிரதேசத்தின் பல மாவட்டங்களில் உள்ள போலீசார், பிரயாக்ராஜுக்குச் செல்லும் பாதையில் வாகன இயக்கத்தை நிறுத்தி வைத்துள்ளனர். 50 கிலோ மீட்டர் செல்ல 12 மணி நேரத்திற்கும் மேல் ஆவதால் இன்று பிரயாக்ராஜ் நோக்கிச் செல்வது சாத்தியமில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களையும் தவிர்க்கும் வகையில் பிரயாக்ராஜ் சங்கம் ரயில் நிலையத்தை அதிகாரிகள் மூடிவிட்டனர்.

Night
Day