கேரளா : பிரசித்திப் பெற்ற ஆற்றுகால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் விழா கோலாகல தொடக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் பொங்கல் விழா 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பரவசத்துடன் அம்மனை சாமி தரிசனம் செய்வர். அந்தவகையில் இந்தாண்டு பொங்கல் விழா கடந்த 17ம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் 9ஆம் நாளான இன்று ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது. இதனையொட்டி, பகவதி அம்மன் கோயில் பக்தர்கள் குவிந்தனர். தம்பானூர், மணக்காடு, கிழக்கேகோட்டா, அம்பலதற உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள், கோயிலின் நுழைவாயில் முன்பு பொங்கலிட்டு அம்மனை பரவசத்துடன் வழிப்பட்டனர்.

Night
Day