கொட்டும் மழையில் அண்ணாமலையாருக்கு பக்தி முழக்கத்துடன் மகா தீப கொப்பரை தோளில் சுமந்தபடி புறப்பாடு

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொட்டு மழையிலும் மகா தீபம் ஏற்றப்படும் கொப்பரை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

திருவண்ணாமலை நகரில் உள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 4 ம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. தீபத் திருவிழாவின் 10ம் நாளான நாளை அதிகாலை 4 மணிக்கு கோவில் கருவறை முன்பு பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து மாலை 6 மணி அளவில் கோவில் பின்புறமுள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரம் கொண்ட தீப மலையில்  மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

இதனை முன்னிட்டு தீப மலையின் மீது ஏற்றப்படும் தீப கொப்பரைக்கு அர்த்தநாரீஸ்வரர் உருவம் பதித்து பல்வேறு வண்ண மலர்களால் மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதன் பின்னர் கொப்பரை பணியாளர்கள் 20க்கும் மேற்பட்டோர் 2 ஆயிரத்து 668 அடி உயரம் கொண்ட தீப மலை உச்சியின் மீது மகா தீப கொப்பரையை  அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு தோளில் சுமந்தபடி, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மலை உச்சிக்கு புறப்பட்டு சென்றனர்.

மேலும் 300 கிலோ எடை கொண்ட இந்த மகா தீப கொப்பரை பஞ்ச லோகத்தால் செய்யப்பட்டு சிவன், விஷ்ணு, பிரம்மா என மூன்று அடுக்குகள் கொண்டவை. ஆன்மீக பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 4 ஆயிரத்து 500 கிலோ நெய் மற்றும் ஆயரத்து 500 மீட்டர் காடா துணிகளால் திரி பயன்படுத்தி நாளை மாலை மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.


varient
Night
Day