கோயில்களில் பக்தி பாடல்கள் மட்டுமே பாட உத்தரவு

எழுத்தின் அளவு: அ+ அ-

கோயில்களில் நடத்தப்படும் இசை கச்சேரிகளில் சினிமா பாடல்கள் பாட அனுமதியில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயில் இசை கச்சேரிகள் நடத்தப்படும் போது பக்தி பாடல்கள் மட்டுமே பாடப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோயில் விழாக்களின்போது சினிமா பாடல்கள் பாடப்படுவதை எதிர்த்து  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது கோயிலுக்குள் பக்தி பாடல்கள் மட்டுமே பாட அனுமதி உண்டு என்று அறநிலையத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், அறங்காவலர் நியமனம் தொடர்பான அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாகவும் அறநிலையத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.

Night
Day