சதுரகிரி மலையில் தரிசனம் - அனுமதி மறுப்பு - ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏமாற்றம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சதுரகிரி மல்லையில் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலையில் நேற்று ஆடி அமாவாசை முன்னிட்டு அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.இந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறிய நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்தனர். மாங்கனி, ஓடை சங்கிலி பாறை, வழுக்கு பாறை, கோண தலைவாசல், இரட்டை லிங்கம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் நேற்று மதியம் பக்தர்கள் 12 மணி அளவில் இருந்து மலையேற அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தானிப்பாறை அடிவாரப்பகுதியில் பேரிக்காடுகள் அமைக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டனர்.

Night
Day