சபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா கர்நாடகா, கேரளா, தெலுங்கானா உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கார்த்திகை மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுகிழமையான இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணபட்டு வருகிறது குறிப்பாக பம்பை, மரக்கூட்டம், சன்னிதானம் உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் சுவாமி தரிசன நேரத்தை மேலும் ஒரு மணிநேரம் அதிகரிக்க தேவசம் போர்டு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Night
Day