சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மாலை திறக்கப்படுகிறது.

நாளை மாலை 5:00 மணிக்கு மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்து விளக்கு ஏற்றுவார். தொடர்ந்து 18 படிகள் வழியாக வந்து ஆழி குண்டத்தில் நெருப்பு வளர்த்த பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 18 படிகளில் ஏறியதும் கொடி மரத்தின் இரண்டு பக்கங்கள் வழியாக பிரிந்து சென்று 25 முதல் 30 வினாடி நேரம் ஐயப்பனை தரிசிக்கும் புதிய பாதை திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. வரும் 19ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட உள்ளது. 

varient
Night
Day