சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 15-ம் தேதி திறக்கப்படுகிறது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பாண்டு  மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக வரும் 15-ம் தேதி நடை திறக்கப்பட உள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.   டிசம்பர் 26-ம் தேதி மாலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு தங்க அங்கி சார்த்தப்பட்டு மண்டல பூஜை நடைபெறும் என்றும் அதனைத் தொடர்ந்து அன்று இரவு 11 மணிக்கு நடை சாத்தப்படும் எனக் கூறியுள்ளது. பின்னர் டிசம்பர் 30-ம் தேதி மாலை 5 மணிக்கு மகரவிளக்கு நடை திறக்கப்படும் என்றும் ஜனவரி 14-ம் தேதி மகர ஜோதி தரிசனம் எனக் குறிப்பிட்டுள்ளது. ஜனவரி 20-ம் தேதி தரிசனம் நிறைவு பெற்று கோவில் நடை சாத்தப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Night
Day