சமுதாய பணிகளை மேற்கொள்ளும் ஸ்ரீ கணபதி சச்தானந்த ஆசிரம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள ஸ்ரீ கணபதி சச்தானந்த ஆசிரமத்தில் பல்வேறு சமுதாய நலதிட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதன்மூலம் எண்ணற்ற மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
 
வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையத்திலிருந்து தரமணி செல்லும் 100 அடி சாலையில், பேபி நகரில் ஸ்ரீ கணபதி சச்தானந்த ஆசிரமம் அமைந்துள்ளது. இந்த ஆசிரமத்தில் ஞாயிறுதோறும் அன்னதானம் வழங்கப்படுவதுடன், தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின் போது, ஏழை, ஆதரவற்ற மாணவர்களுக்கு புத்தாடைகள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மேலும் மழை, வெள்ளம், கொரோனா போன்ற பேரிடர்களின் போது சென்னை ஆசிரமம் தேவையான உதவிகளை செய்து வந்துள்ளது. கர்நாடகாவின் மேகதாதுவில் சத்யநாராயணனாக அவதரித்த ஆசிரம நிறுவனர், தீட்சை மேற்கொண்ட பின்னர் தனது பெயரை பரமபூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ கணபதி ஸச்சிதானந்த ஸ்வாமிஜி என் மாற்றிக்கொண்டார்.

Night
Day